மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதமர் மோடி தமிழகம் வருகை: இந்த முறை ‘Go Back Modi’ கோஷம் இல்லை…முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரவேற்பு..!
பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் மே இருபத்தி ஆறாம் தேதி தமிழகம் வர உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விழாவினை ஒட்டி பிரதமர் கலந்து கொள்வதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே சந்திப்பு நடைபெறூம் என்று கூறப்பட்டுள்ளது.
இருவரது சந்திப்பில் இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது குறித்தும் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்க இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடன் இருப்பர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.