மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் 1 சிறுவன் உள்ளிட்ட 5 பேர் அதிரடி கைது!!.. ஆயுதங்கள் பறிமுதல்..!!
பெரம்பூர் அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, பெரம்பூர் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அ.தி.மு.க பகுதி செயலாளராக உள்ளார். நேற்று கட்சி அலுவலகத்தில் இருந்து இரவு வீடு திரும்பிய இளங்கோவனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அந்த பகுதியில் இதனை கவனிக்க யாரும் இல்லாததால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் காவல்துறையினர், இளங்கோவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இளங்கோவன் கொலை வழக்கில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ மற்றும் 5 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.