மிளகாய் பொடி, மிளகு பொடி தூவி தப்பித்தோம்.. உக்ரைனில் இருந்து வந்த புதுக்கோட்டை மாணவி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!



Pudhukottai student came from Ukraine

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. 

இந்தநிலையில், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனில்  மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையை சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயியின் மகள் பிரீத்தி என்ற 21 வயது இளம்பெண் உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் பிரீத்தி அங்கு தவித்து வந்துள்ளார். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவியின் பெற்றோர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று மாணவி பிரீத்தி உக்ரைன் நாட்டில் இருந்து அறந்தாங்கி வந்தடைந்தார். அவரை பெற்றோர் உணர்ச்சி பொங்க வரவேற்றனர். இதுதொடர்பாக மாணவி கூறுகையில், உக்ரைன் நாட்டில் போர் நடந்த போது எங்களை கவனமாக இருக்க சொன்னார்கள். அங்கிருந்து பேருந்து மூலமாக ருமேனியா வந்தோம். நாங்கள் பேருந்தில் ஏறியபோது ஏராளமானவர்கள் கூட்டம், கூட்டமாக பேருந்தை சூழ்ந்ததால் மிளகாய் பொடி, மிளகு பொடி தூவி கூட்டத்தை கலைத்து எங்களை பேருந்தில் ஏற்றிச்சென்று பாதுகாப்பாக தங்க வைத்து இருந்தனர். அங்கிருந்து மத்திய அரசு குழுவினர் இந்திய மாணவர்களை அழைத்து வந்தனர். என்னை போன்ற மாணவ-மாணவிகள் இன்னும் அங்கு உள்ளனர். அவர்களையும் மத்திய-மாநில அரசுகள் மீட்க வேண்டும் என தெரிவித்தார்.