சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
#Breaking: அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. குடை இல்லாம வராதீங்க..!
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், உள்ப மாவட்டங்கள் என பல இடங்களில் மழை பெய்யலாம் என்று முன்னெச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையில் 29 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.