கனமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!.. இரவு நேரத்தில் பயணம் செய்ய தடை..!



Red alert for 10 districts due to heavy rains No travel at night

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அம்மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வரும் 3 நாட்களுக்கு தடைசெய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் உதகை, நீலகிரி பகுதியிலிருந்து இரவு நேரத்தில் பொதுமக்கள் கேரள மாநிலத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.