மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Red Alert: இந்த மூன்று மாவட்ட மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கடந்த சனிக்கிழமையில் இருந்தே விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே அந்த மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடல் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசிக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.