அட.. வேற லெவல்! யாருப்பா அந்த கான்ட்ராக்டர்.! இப்படியொரு ரோட்டை யாரும் போட்ருக்கமாட்டாங்க! வைரலாகும் ஷாக் வீடியோ!!



road-set-up-with-bike-tyre-video-viral

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த  நிலையில் அங்கு பல்வேறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் சிவா என்பவர் தங்களது கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டு இருந்துள்ளது. மேலும் ரோட்டில் இருந்த பைக்கோடும் சேர்த்து ரோடு போடப்பட்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் வாகனத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சிமெண்டு கலவை நன்கு காய்ந்து இறுகியதால் பைக்கை எடுக்க முடியவில்லையாம். அதனை தொடர்ந்து அப்பகுதியில் சாலையை உடைத்து பைக்கை  மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து யுவராஜ் என்பவர் கூறுகையில், நேற்று இரவு  11 மணியளவில் எனது தம்பி கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சென்றான்.அப்போது வரை  அங்கு சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.

பின்னர்  இரவோடு இரவாக பைக்குடன் சேர்த்து ரோடு போட்டுள்ளனர். இதுகுறித்து கான்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்தனர். பைக் வீணாகிவிட்டது என கூறியுள்ளார். இந்த ரோடு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.