53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
16 வயது சிறுமி காதலருடன் ஓட்டம்?.. தற்கொலைக்கு முயற்சித்த பெற்றோர்; தாய் பரிதாப பலி.!
சிறுமியான மகள் காதலனுடன் சென்றதால் மனமடைந்த பெற்றோர் தற்கொலைக்கு முயற்சித்த சோகத்தில் தாய் பரிதாபமாக உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயது மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்த நிலையில், இவரை சலீம் மன்ற 23 வயது இளைஞர் காதல் வலையில் வீழ்த்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மாணவியை, சலீம் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து மனமடைந்த பெற்றோர், உணவில் பூச்சி மருந்தை கலந்த சாப்பிட்டு இருக்கின்றனர்.
அரைமயக்க நிலையில் வாயில் நுரைதள்ளி உயிருக்கு போராடியவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட சிறுமியின் தாய் உயிரிழக்கவே, தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் சலீமை தேடி வருகின்றனர்.