மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா பாணியில் பைக், செல்போன் திருட்டு.. சிறுவன் உட்பட 3 பேர் பரபரப்பு கைது.!
வெவ்வேறு இடங்களில் பைக் மற்றும் மொபைலை திருடிய சிறுவன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் சந்திரகலா, செல்வராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சீலநாயக்கன்பட்டி மற்றும் தாதகாப்பட்டியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய மூவர் சுற்றி வந்த நிலையில், காவல்துறையினரை பார்த்தவுடன் உடனடியாக தெறித்து ஓடியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வர சினிமா பாணியில் அவர்களை பின்தொடர்ந்து ஓடியுள்ளனர்.
மேலும், ஒரு கட்டத்தில் அவர்களை விரட்டிப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சேலம் மாவட்டம் மணியனூர் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 25) என்பதும், மணியனூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன் மற்றும் சேலம் டவுன் பட்டைகோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி(வயது 21) என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் காந்திநகர் பகுதியில் கோவிந்தன் என்பவருடைய இருசக்கர வாகனத்தை திருடியதும், ஹரி சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகர் பகுதியில் முருகன் என்பவரது மொபைல் போனை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் வெவ்வேறு பகுதியில் சென்று திருடியதை ஒப்புக் கொண்டதால், 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.