மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே உஷார்.. மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் மரணம்.!
சாத்தூரில் மர்ம காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பலரும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வைரஸ் காய்ச்சலால் உயிருக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்த தையல்காரர் முருகன். இவரது மகன் சக்திவேல் சாத்தூரில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். என்ன நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்தபோது சக்திவேல் திடீரென வாந்தி எடுத்தார். இதனையடுத்து உடனடியாக அவரை சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.