தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு,..பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.