35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்.! அமைச்சர் செங்கோட்டையன்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் நலனுக்காக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வருகிற 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலங்கள் இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். எந்த மாநிலத்திலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. பாண்டிச்சேரியில் மட்டும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க திறக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என தெரிவித்தார்.