அதிர்ச்சி... மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்... அரசு மருத்துவமனையில் அனுமதி.!



shock-in-tiruvannamalai-district-50-students-who-ate-lu

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால்  அதிர்ச்சி நிலவியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டரை என்னும் ஊரில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

tamilnadu இந்நிலையில் நேற்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவின் போது மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பள்ளி கிடந்ததை பார்த்த மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் 5 மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்திருக்கிறார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கே மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து வெறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.