திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரம்... போலி மருத்துவரின் சிகிச்சையால் 14 வயது சிறுவன் பரிதாப பலி.!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலி டாக்டரின் தவறான சிகிச்சையால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது கோடை காலம் முடிந்து பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் மர்ம காய்ச்சல் மற்றும் சளியாகியவை மாநிலம் எங்கும் பரவி வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சார்ந்த சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவன் காய்ச்சலால் அவதிப்பட்டு இருக்கிறான். இது தொடர்பாக கோபிநாத் என்பவரிடம் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்துச் சென்று இருக்கின்றனர் . அந்த நபர் சிறுவனுக்கு சிகிச்சையளித்து ஊசி போட்ட போது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் பதிவு செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கோபிநாத் என்பவரை கைது செய்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.