குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கவலைக்கிடமாக இருந்த எஸ்.பி.பி அவர்களின் தற்போதைய நிலை என்ன.? அவரது மகன் வெளியிட்ட முக்கிய தகவல்.!
கடந்த 48 மணி நேரமாக தனது தந்தை எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளர்.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல சினிமா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 14 ஆம் தேதி முதல் கவலைக்கிடமானது. எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.
இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். இதனிடையே எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக நேற்று மருத்துவமனை அறிவித்தது.
இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் சரண் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. இது நல்ல அறிகுறி. எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.