குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நவீன கருவி உதவியுடன் சிகிச்சை..! ஆனாலும்... எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ஷாக் ரிப்போர்ட்.!
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்த மீண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் இருந்து மீண்டுவிட்டார் என்ற செய்தியை கேட்பதற்காக பலரும் காத்து கிடக்கின்றனர்.
ஆனால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்க்ளின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.