#Breaking: நடுரோட்டில் ஓடஓடவிரட்டி ரௌடி மனோ வெட்டிக்கொலை; காரைக்குடியில் பயங்கரம்.. ஈரோட்டைத் தொடர்ந்து காரைக்குடியில் ஷாக்..!



Sivagangai Karaikudi Rowdy Mano Killed 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சேர்வாஊரணி கிராமத்தை சேர்ந்தவர் மனோ என்ற மனோஜ். இவர் கஞ்சா விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் அங்குள்ள காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உட்பட சில வழக்குகள் மனோவின் மீது இருக்கின்றன.

சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரௌடி மனோ, நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளார். இதனால் அவர் தினமும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும்.

ஓடஓட விரட்டி பயங்கரம்

இன்று காலை மனோ தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் வந்தார். அப்போது, எதிர்திசையில் காரில் வந்த கும்பல், மனோவின் மீது இருசக்கர வாகனத்தை மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவரை கும்பல் கொலை செய்ய முற்பட்டது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் பக்தர் மரணம் விவகாரம்; குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி..! அதிரவைக்கும் தகவல் அம்பலம்.!

sivagangai

சுதாரித்த மனோ எழுந்து ஓடிய நிலையில், காரைக்குடி 100 அடி சாலையில் 500 மீட்டர் தொலைவு ஓடினார். எனினும், பிரபல கடை முன்பு ரௌடி மனோவை சுற்றிவளைத்த கும்பல், சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. இந்த சம்பவத்தில் மனோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை

மேலும், அவரின் நண்பர்கள் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மனோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் நண்பர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: அம்மா என்ன அதிசியம் இது? வைகை ஆற்றில் உக்கிர அம்மன் சிலை.!