மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு நடந்த திருமணம்! மெளனம் கலைத்த செளந்தர்யா.!
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு நேற்று முன்தினம் அவரது காதலியை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் அந்த பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ததாகவும், அந்த பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.
இந்த நிலையில் தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், செளந்தர்யா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை யாரும் கடத்தவில்லை, நானும் பிரபுவும் காதலித்தோம். ஆனால் என் குடும்பத்தார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னை யாரும் மிரட்டவில்லை, என் முழு சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார்.