மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த மீன் பார்க்கத்தான் சிறுசு!! ஆனால் இதன் விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!!அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நாகப்பட்டினம் அருகே விசைப்படகு மீனவரான ஜீவா என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடிக்கும் போது அவரது வலையில் அறியவகை மீனான 25 கிலோ எடையிலான கத்தாழை மீன் ஒன்று சிக்கியுள்ளது.
பிடித்த மீன்களை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில், ஜீவா வலையில் சிக்கிய அந்த அறிய வகை கத்தாழை மீன் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாயுள்ளது.
கத்தாழை மீனின் இறைச்சி கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், அதன் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் இந்த வகை மீன்கள் விலை உயர்ந்த மீன்களாக உள்ளன.
கத்தாழை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள்தெரிவித்துள்ளனர்.