மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமூக வலைத்தளங்களில் சாதி, மத கலவரத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
சமூக வலைதளத்தில் சாதி, மத கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் அதிரடி உத்தரவு. தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காவல் உயர் அதிகாரியுடன் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய, முதல்வர் ஸ்டாலின் "மக்களுக்கு பிரச்னை ஏற்படுவதற்கு முன் கூட்டியே காவல்துறை முன் நடவடிக்கை எடுக்க வேண்டும், மரணங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் புகார் மீது போலீசார் நடுநிலை தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சாதி, மத கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.