மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெட்ரோல் குண்டு வீசி இன்ஸ்ட்டா ரீல்ஸ்... சிறுவர்களை தட்டி தூக்கிய காவல்துறை.!
வள்ளியூரில் பெட்ரோல் பாம் தயாரித்து அதனை வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வள்ளியூா் கீழத்தெருவைச் சோந்தவா்கள் இசக்கியப்பன், சரவணன், அரவிந்த் உள்ளிட்ட நான்கு பேர் பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை சுவரில் வெடிக்க வைத்து அந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்திருக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது காவல்துறையின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வள்ளியூா் கீழத்தெருவைச் சோந்தவா்கள் இசக்கியப்பன், சரவணன், அரவிந்த் உள்ளிட்ட நான்கு போ என காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களில் மூன்று பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.