மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியானது தமிழ்நாடு வனக்காவலர் பணிக்கான தேர்வு அறிவிப்பு.!
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள்: 564
கல்வி தகுதி:
பள்ளி படிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைப்பட்சம் 21 வயது முதல் 35 வயது வரை. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், அவர்களுக்கு, ராணுவப் பணி கழிந்தது போக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ரூ. 16,600 முதல் ரூ. 52,000 வரை
மே முதல் வாரம் முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே, மூன்றாவது வாரம். கணினி மூலமாக இணைய வழித் தேர்வு நடைபெறும் நாள் ஜூன், நான்காம் வாரம்.
இத்தேர்விற்கான பாடத்திட்டம் www.forests.tn.gov.in என்ற வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.