மலிவு விலையில் மாணவர்ளுக்கு லேப்டாப்? - அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Tamilnadu Assembly 2025 Thangam Thennarasu Vs Thangamani Laptop Argument


தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2025 பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை உறுப்பினரலின் கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களின் பதிலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு, 20 இலச்சம் மாணவ மாணவியருக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என தெரிவித்தார்.

TN Assembly

எதிர்க்கட்சி கேள்வி

இந்த விஷயத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, ரூ.2000 கோடி செலவில், 20 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஒரு லேப்டாப் ரூ.10000 தொகைக்கு கொள்முதல் செய்யப்படுமா? ரூ.10 ஆயிரம் தொகையில் வாங்கப்படும் லேப்டாப் எப்படி தரத்துடன் இருக்கும்? என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: #Breaking: தூத்துக்குடி, சாத்தான்குளம் நினைவிருக்கா? - கேள்வி கேட்டதும் வெளியே வந்த அதிமுக..!

TN Assembly

ரூ.20000 க்கு லேப்டாப் வாங்கப்படும்

எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மடிக்கணினி வாங்கும் திட்டத்துக்கு முதற்கட்டமாகவே ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடிக்கணினி தலா ரூ.20000 செலவில், 20 இலட்சம் மாணவ-மாணவியருக்கும் மடிக்கணினி வழங்கப்படும். கூடுதல் தொகை தேவைப்படும் நேரத்தில் விடுவிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தேவைப்பட்டால் கூடுதல் மடிக்கணினியும் வாங்கப்படும்" என பேசினார். 

இதையும் படிங்க: நாய் கடித்து உயிரிழந்த மாடு, ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு.. சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு.!