மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்தலுக்காக தற்காலிக கிராம நிர்வாக அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக கிராம நிர்வாக அதிகாரிகளை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று அதிமுகவின் சார்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 2896 விஏஓ பணியிடங்களில் 1000 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அவர்களுக்கு மாதம் 15000 ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி புதிய கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் வரை இந்த தற்காலிக அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.