மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடைக்கானலில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ; விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசம்..!!
கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சி வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதால், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமானது.
கொடைக்கானலில் மாலை மற்றும் இரவு, அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இருந்த போதிலும் பகல் வேலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் செடி, கொடிகள், புற்கள் காய்ந்து கருகி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி கிராமத்தில் பட்டா நிலங்களில் திடீரென காட்டுத்தீ பரவியது. இந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவியது.
காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இரண்டு ஏக்கரில் பற்றி எரிந்த தீயால் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.