ஆஸ்கர் விருது வென்ற உண்மைக்கதை!!.. நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தம்பதியினர்..!!
நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியை சேர்ந்தவர் பொம்மன். இவரது மனைவி பொள்ளி. இந்த தம்பதியினர் தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகளை வளர்த்து அவற்றை பராமரித்து வருகின்றனர். இவர்கள் தற்போது பராமரித்து வரும் குட்டி யானை ரவி.
இந்த மூன்று பேரையும் இணைக்கும் பந்தம் குறித்த ஆவண குறும்படத்தை இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 95 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ குறும்படம் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்காக அதன் இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் குனெட் மொன்கோ ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றனர்.