மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேப்ப மரத்தில் வடியும் பால்.... பரவசத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு..!!
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் உள்ள வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் வழியில் உள்ள சின்னக்குளத்தில் பல ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து அறிந்ததும் வெள்ளோடு மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்று, வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில்,
வெள்ளோட்டில் இருக்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் பொங்கல் விழா நடந்தது. எனவே இது மாரியம்மன் அருளாக இருக்கும் என நினைக்கின்றோம். ஏராளமான மக்கள் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் இங்கு வந்து வேப்ப மரத்தை தரிசனம் செய்கின்றனர் என்றார். வேப்ப மரத்தில் பால் வடிவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.