மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவசரத்துக்கு டெட்டாலை குடித்த முதியவர்..! பதறிய மனைவி: தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாப பலி..!
ஈரோடு மாவட்டம், எல்லீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஏசுநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்து தங்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சாமிநாதன்-எலிசபத் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமையை இழந்த எலிசபெத், இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறிவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை சாமிநாதன் தூங்கி எழுந்தது முதலே தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து கேட்டபோது, வீட்டில் இருந்த டெட்டாலை குடித்துவிட்டதாக சாமிநாதன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எலிசபத், அக்கம்பக்கத்தோர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாமிநாதனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், சாமிநாதன் உடலை கைப்பற்றிய காஞ்சிகோவில் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.