மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் இடிந்து விழுந்த மேற்கூரை: பரிதாபமாக பலியான தாயும் மகனும்..!!
மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாயும் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாராம்மா (34) இவரது மகன் அக்தர் (12). இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டினுள் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய சாராம்மா மற்றும் அக்தர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டனர். இதன் பின்னர் அவர்களது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.