திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் படுகாயம்.!
தேவகோட்டை வெங்களூர் அருகிலுள்ள நாட்டார்வளி கிராமத்தில் கருப்பையா தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக கருப்பையாவின் வீட்டு சுவர் ஈரமான நிலையில் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று கருப்பையவின் மகள் பூபதி வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பூபதி பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து பூபதியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பூபதியை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் கருப்பையாவின் மகள் பூபதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.