மணமான 25 நாளில் சம்பவம்..! கணவனுக்கு பால் ஊத்த ஸ்கெட்ச்.. பாசக்கார மனைவி பகீர் செயல்.. விதியால் விண்ணுலகம் சென்ற மனைவி.!!



Theni Cumbum Wife Murder Attempt Husband Finally She Suicide

கல்யாணம் முடிந்து 25 நாட்களுக்குள் கணவரை தீர்த்துக்கட்ட நினைத்த பெண்மணி, கணவருக்கு விஷயம் தெரியவந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், உலகத்தேவர் தெருவை சார்ந்தவர் கெளதம் (வயது 24). இதே பகுதியை சார்ந்தவர் புவனேஸ்வரி (வயது 21). இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், திருமணம் முடிந்து 25 நாட்கள் மட்டும் ஆவதால் வரதட்சணை கொடுமையில் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை நடந்ததா? என ஆர்.டி.ஓ மேல் விசாரணையும் நடந்தது. இதற்குள்ளாக, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Theni

இந்த விஷயம் தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் துறையினர் தெரிவிக்கையில், "புவனேஸ்வரிக்கு கௌதமுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை. அதனால் அவரை கொலை செய்ய புவனேஸ்வரி முடிவு செய்துள்ளார். இக்கொலையை அரங்கேற்ற தனக்கு தெரிந்த நபர்களை கூலிப்படையாகவும் நியமனம் செய்துள்ளார். 

அங்குள்ள அனுமந்தன்பட்டி அருகேயுள்ள கோவிந்தன்பட்டி பகுதியை சார்ந்த பாக்யராஜ் மகன் ஆண்டனி (வயது 20) என்பாரிடம் பணம் கொடுத்து, கணவரை குமுளிக்கு அழைத்து வருகிறேன். அங்கு காரை ஏற்றி அவரை கொலை செய்ய வேண்டும் எனவும் புவனேஸ்வரி திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். மேலும், தனது நகையை வங்கியில் அடமானம் வைத்து ரூ.75 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். 

Theni

கடந்த 2 ஆம் தேதி கணவரிடம் ஆசை வார்த்தை கூறி குமுளிக்கு அழைத்துச்சென்ற புனவனேஸ்வரி, தங்களின் விபரத்தை கூலிப்படைக்கும் தெரிவித்துள்ளார். கூடலூர் தொட்டிப்பாலம் அருகே கெளதம் மற்றும் புவனேஸ்வரி தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றிப்பார்த்த நிலையில், ஆண்டனி தனது கூட்டாளிகள் பிரதீப் (வயது 35), மனோஜ்குமார் (வயது 20), ஆல்பர்ட், ஜெயசத்தியா (வயது 17), ஜெட்லீ (வயது 25) ஆகியோருடன் கேரள பதிவெண் கொண்ட காரில் வந்து கௌதமை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

கெளதம் சுதாரித்துக்கொண்டு விலகிவிடவே, நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். காரை விட்டு இறங்கிய கும்பல் கௌதமை சரமாரியாக தாக்கவே, ஆட்கள் அவ்வழியாக வந்ததால் கூலிப்படை தப்பி சென்றுள்ளது. கேரள பதிவெண் கொண்ட கார் குறித்து கெளதம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, கார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வருகையில் புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். 

Theni

மேலும், கணவரை கொலை செய்ய முயற்சித்தது ஏறக்குறைய கணவருக்கு தெரியவந்துவிட்டதால், புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதும் அம்பலமானது. குற்றவாளிகளில் ஜெட்லீயை தவிர்த்து 5 பேர் கைது செய்யப்பட்ட போது நடந்த விசாரணையில், புவனேஸ்வரியின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. புவனேஸ்வரி திருமணம் முடிந்த 25 நாட்களில் கணவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? அவர் திருமணத்திற்கு முன்னர் யாரையேனும் காதலித்து வந்ததாரா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.