பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
தவெக நிர்வாகிகள் நியமனத்தில் தொடரும் சர்ச்சை.. மகளிர் அணி பரபரப்பு குமுறல்.!

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தோற்றுவித்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் மற்றும் பிற பொருளாளர்கள் நியமனம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. கட்சியின் கட்டுப்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் கையில் எடுத்து, உழைக்காதவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. விஜய் இவ்விசயத்தில் தலையிட்டு உரிய பதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: SC வரக்கூடாது.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் புகுந்த சாதி.. உழைத்தவர்கள் குமுறல்.!
தொடரும் சர்ச்சை
இந்நிலையில், தேனி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகியாக கருதப்படும் சத்யா நந்தகுமார் என்பவர், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த தனக்கு பொறுப்பு வழங்காமல், உழைக்காத நபர்களுக்கு ஜாதி பார்த்து, அவர்களின் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்படுகிறது.
என்னை களத்தில் இறங்கி பணியாற்றவும் அனுமதி கொடுக்கவில்லை. நான் விஜய் அண்ணாவுக்காகத்தான் களத்தில் இறங்கி உழைக்கிறேன். பொறுப்பு எனது சிறிய அங்கீகாரமே. உழைப்பவர்களை விட்டுவிட்டு, பிற நபர்களுக்கு அதனை கொடுப்பது எப்படிப்பட்டது? கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நான் கட்சியில் இருந்து விலகி ஆர்வலராகவும் விஜய் அண்ணாவுக்காக பணியாற்றுவேன். ஆனால், எனது விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்.
நான் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வித களங்கமும் ஏற்படுத்த இச்செய்தியை பதிவிடவில்லை, என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு தளபதி விஜய் அண்ணாவிடம் மட்டுமே நியாயம் கிடைக்கும் என இந்த கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன்..!@tvkvijayhq @actorvijay @AadhavArjuna @Ibrahim_0369… pic.twitter.com/84sVaYbSFU
— TVK Sathya Nanthakumar (@TVK_Sathya) February 3, 2025
கட்சியின் மாவட்ட செயலாளர், பிற பொறுப்பாளர் சொல்லி நான் நல்லது செய்கிறேன் என சொல்ல சொல்கிறார்கள். நாங்கள் உழைக்க அவர்களுக்கு பெயரா? உழைக்கும் எங்களுக்கு என்ன கிடைக்கும்? பணம், பொருள், குடும்பம் என பல விஷயங்களை கட்சிக்காக பாகுபாடு இன்றி நாங்கள் கொடுக்கிறோம். ஆனால், சிலரின் பேச்சை கேட்டு தலைமை மாற்று வழியில் நடப்பது எப்படிப்பட்டது?.
இன்று ஒரு கட்சி பதவிக்காக என்னைப்பற்றி அவதூறு பேசுகிறார்கள். நாளை அவர்களின் பொறுப்பை தக்கவைக்க எப்படியான செயலையும் செய்வார்கள். இவர்கள் எப்படி மக்கள் பணி செய்வார்கள்? என சத்யா குமுறும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், என் மீது எந்தவிதமான புகாரும் இல்லாத நிலையில், காவல் நிலையத்தில் என் மீது 4 வழக்கு இருப்பதாக பொய்யுரைத்து பதவிகளை பெறுகிறார்கள். போஸ்டிங் தரவில்லை என்று யாரும் புகார் அளிக்கவில்லை உழைப்பவர்களை தரம் தாழ்த்தி அவதூறு பரப்பி அவர்களை தகுதியற்றவர் என்று சித்தரித்து, உயர்பொறுப்பில் இருக்கும் நபர்கள், தங்களின் உறவினர்களுக்கு பொறுப்புகளை மாற்றி வழங்க வைப்பது நல்லதல்ல என பெண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகள் பதவிக்கு பணமா? நோ., நெவர் - புஸ்ஸி ஆனந்த் உச்சகட்ட எச்சரிக்கை.!