மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சி.. காவலர்களை கண்டு தலைதெறித்து ஓட்டம்.. 3 பேர் கைது.!
நகை கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 3 கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகாமையில், அய்யலூர் ரயில் நிலைய சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. அங்கு நேற்று நள்ளிரவு மூன்று நபர்கள் சுவற்றை துளையிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது சுவற்றை துளையிடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 'ஏதோ பிரச்சனை' என எண்ணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க சென்ற நிலையில், சினிமா பாணியில் தப்பித்தால் போதும் என மூவரும் ஓட தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் காவல்துறையினர் விடாமல் துரத்தி சென்று, ஒருவரை மடக்கிப் பிடித்த நிலையில், சிக்கிய ஒருவனை வைத்து மற்ற இருவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தனிப்படை காவல்துறையினர் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.