மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்..!
மழை வெள்ளத்தால் திருச்செந்தூர் முருகன் கோவில் நிரம்பியது. பல வருடங்களுக்கு பின்னர் இப்படியான நிகழ்வு ஏற்பட்டு இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போதைய நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் கனமழை பெய்யும்.
கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யலாம் என சென்னை வானிலை மையம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் வளாகங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சுற்றிலும் என எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. காலை முதலாகவே தொடர்ந்து பெய்து வந்த மழையின் எதிரொலியாக, திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் கோவில் பிரகார வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
இது குறித்து உள்ளூர் நபர்கள் தெரிவிக்கையில், "மழை காலங்களின் போது இவ்வாறாக நீர் தேங்கியதில்லை. ஆனால், முந்தைய காலங்களில் இதேபோன்றதொரு நிகழ்வு ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட வருடம் கழித்து கோவில் வளாகத்தில் மழை வெள்ள நீர் தேங்கி இருக்கிறது. கோவில் கட்டுவதற்கு முன்னதாக கோவில் வாசல் வரை மழை நீர் வந்தது எனவும் எங்கள் முன்னோர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். நீண்ட வருடம் கழித்து இப்படி பார்க்கிறோம்" என்று தெரிவித்தனர்.
@KanimozhiDMK
— Saravan Vijay (@SaravanVijay2) November 25, 2021
திருச்செந்தூர் முருகன் கோயில் கனமழை@CMOTamilnadu @mkstalin @DMKTirunelveli pic.twitter.com/4JQZzLTob2
தற்போது 11.40 மணி நிலவரப்படி திருச்செந்தூர் 110 மிமீ மழை பதிவு pic.twitter.com/s5xbRgu1kA
— Nellai Halwa Venkey Mjpt (@HalwaMjpt) November 25, 2021
#தூத்துக்குடி மாவட்டம் #திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் தென்படுகிறது. pic.twitter.com/dru7A8uCWH
— Kalyanasundaram (@kalyanasundarsv) November 25, 2021
Tiruchendur. திருச்செந்தூர் pic.twitter.com/V4qV0tJOCi
— 🇮🇳K N RAMESH🚩 (@RAMESHNAVAKOTTI) November 25, 2021