ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பழைய வீடியோவை பட்டி, டிங்கரிங் பார்த்து வதந்(தீ)தி - நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.!

அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் பதிவிட்டுள்ள முகநூல் பதிவில், " கடந்த 2018 ஆம் வருடம் கேரளா மாநிலம் மனக்காடு பகுதியில் பேருந்து ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் நடந்ததை போல சித்தரித்து தற்போது பரப்பப்பட்டு வருகிறது.
மேலும், வீடியோவில் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறான செய்தியை வேண்டும் என்றே பரப்பினால், அவ்வாறு பரப்பும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.