மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்... உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது.!
திருப்பூர் மாவட்டத்தில் காதலை கைவிட வற்புறுத்தியதால் காதலியுடன் இருந்த உல்லாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் 26 வயதான இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலை பார்த்த 22 வயது இளம் பெண்ணும் ஷாஜகானும் பழகி வந்துள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அந்தப் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கே வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயத்துள்ளனர். இதனால் ஷாஜகான் உடன் பழகுவதை அவர் தவிர்த்து வந்திருக்கிறார்.
அந்தப் பெண்ணை வேறொரு எண்ணில் தொடர்பு கொண்ட ஷாஜகான் மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார். இவரது மிரட்டலை பற்றி அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஷாஜகானுக்கு எதிராக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.