மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ShockingVIdeo: போதை இளைஞரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துனர்... அதிரவைக்கும் வீடியோ..! வந்தவாசியில் பேரதிர்ச்சி.!
மதுபோதையில் தள்ளாடியபடி பேருந்தில் கீழே இறங்க முயற்சிக்கும் குடிகார இளைஞரை அரசு பேருந்து நடத்துனர் தள்ளிவிட்டு பேருந்தில் புறப்பட்டு சென்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நடத்துனர் குடிமகனை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கின்றன.
இந்த விடீயோவில், பேருந்து நடத்துனர் தள்ளாடிய போதையில் மெதுவாக இறங்கும் இளைஞரின் மீது தண்ணீரை ஊற்றியவாறு இறங்க சொல்லுகிறார். தள்ளாடிக்கொண்டு இறங்கிய இளைஞரை ஒரு கட்டத்திற்கு மேல் பின்னால் இருந்து பேருந்தின் கீழே தள்ளிவிட்டு பேருந்தை இயக்கச்சொல்லி அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
இதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் அவரை இறக்கிவிட்டு கீழே படுக்கவைத்து சென்றிருக்கலாம். எதற்காக படியில் இருந்து தள்ளிவிட வேண்டும்?. மதுபோதையில் ஏறியதை அவரின் தவறு என சொல்லவா? அதனை விற்பனை செய்யும் அரசை தவறு என சொல்லவா?
குடிமகனிடம் போராடிப்பார்த்து ஆத்திரத்தில் செய்யும் நடத்துனரின் செயல் தவறு என சொல்லவா? யாரை குறை கூறுவது? என்ற கேள்வியையும் முன்வைத்து கண்டனத்தை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு பேருந்தின் பதிவெண்: தநா 25 நா 0670