திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தமிழக மீனவர்கள் 28 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: சோகத்தில் மீனவ குடும்பத்தினர்.!
மாதிரி படம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இவர்கள் தனுஷ்கோடி, நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த சிங்கள கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியுள்ளது.
பின், அங்கிருந்த 28 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினருக்கு, அதிர்ச்சி செய்தியாக அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.