#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு, மாலை 4 மணிவரை 22 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.!
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் இன்று பரவலான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரையில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்,
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.