#BigNews: பெண்களின் ஆதார், பான் நம்பர் வைத்து மிகப்பெரிய மோசடி: மகளிர் உரிமைத்தொகை இரத்து விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!



TN Women Aadhar PAN Numbers Misused by Strange Team Beyond Rs 1000 Cancel Investigation 

 

தமிழ்நாடு அரசின் சார்பில் குடும்ப அட்டை வைத்துள்ள, ஏழை-எளிய பெண்களின் வாழ்வியலை முன்னேற்றும் பொருட்டும், அவர்களுக்கு மாதம் உரிமைத்தொகை வழங்கும் பொருட்டும் ரூ.1000 நிதிஉதவி பெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் தேவைப்பட்டன. தரவுகள் சேகரிக்கப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக களஆய்வு நடந்து இறுதியில் தகுதி உள்ளவர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டது. சிலருக்கு பணம் வரவில்லை. அவர்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் இரத்துக்கான காரணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறப்படாத குடும்பத் தலைவிகள் பெயரில், அவர்களின் ஆதார்-பான் கார்டு உட்பட ஆவணங்களை மோசடி செய்து கும்பல் பெற்றுள்ளது. இந்த கும்பல் அவர்களின் அடையாளங்களை பயன்படுத்தி, பல நகரங்களில் போலியான நிறுவனங்களை தொடங்கி அரசு உதவி பெற்று வந்துள்ளது. 

இதனாலேயே பல பெண்களுக்கும், அவர்களின் பெயரில் நிறுவனங்கள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்து, உரிமைத்தொகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான மோசடி அம்பலமாகியுள்ள நிலையில், தகவல் தமிழ்நாடு முதல்வர் வரை சென்றுள்ளது. இதுகுறித்து விரைந்து விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.