திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையில் கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையவில்லை! மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்த டிடிவி தினகரன்!
உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
இந்தநிலயில் டிடிவி தினகரன் மாநகராட்சியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
சென்னையில் கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 8, 2020
மக்கள் படும் துயரத்தைக் கருத்தில்கொண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையிலாவது நீட்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.