மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
பிளாஸ்டிக்கு குட் பை., கையில் எடுப்போம் "மஞ்சப்பை"... மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு.!
மனிதனுக்கு நச்சுக்கொல்லி பொருட்கள் எப்படி உயிருக்கு தீமையாக இருக்கிறதோ, அதனைப்போல நமது பூமித்தாய்க்கும், சுற்றுப்புற சூழலுக்கும் நச்சுக்கொல்லியாக பிளாஸ்டிக் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான நெகிழி பைகள், நம்மிடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்திவிட்டது.
குப்பைகளில் முழுவதும் நிரம்பி காணப்படும் நெகிழிகள், எளிதில் மக்காமல் இருக்கும் தன்மையை கொண்டவை. பிளாஸ்டிக்கை உபயோகம் செய்யும் பலரும் அதனை அலட்சியமாக வீசி எறிந்து வருகின்றனர். இதனால் நமது சுற்றுப்புறசூழல் பாதிக்கப்பட்டு, கால்நடைகள் அதனை உணவு என நினைத்து சாப்பிடும் சோகமும் நடக்கிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ஏராளம்,
உலக நாடுகளே பிளாஸ்டிக் குப்பையை தன்னுடன் வைத்துக்கொண்டு திணறி வரும் நிலையில், கடலில் உள்ள மீன்களும் அதனை சாப்பிட்டு உயிரிழந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் பிளாஸ்டிக்கை முற்றிலும் அகற்ற தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. கடந்த 20 ~ 30 வருடங்களுக்கு முன்னர் வரை நம்மிடையே சணல் பை, கட்டைப்பை, மஞ்சப்பை போன்றவை புழக்கத்தில் இருந்தது.
பின்னர், மாறிவந்த கலாச்சாரம், அதனால் ஏற்பட்ட ஈர்ப்பு மோகத்தால் அதற்கு விடைகொடுக்க தொடங்கி, இன்று எங்கும், எதற்கும் பிளாஸ்டிக் பை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனைகைவிட்டு மீண்டும் மஞ்சப்பையை கையில் எடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆம், கடந்த 20 வருடங்களில் பிளாஸ்டிக்கால் நேர்ந்த சுற்றுப்புறசூழல் தீமையும், விலங்குகளின் உயிரிழப்பும் அதற்கு சாட்சி.
மீண்டும் கையில் எடுப்போம் மஞ்சப்பையை, கைவிடுவோம் பிளாஸ்டிக்கை.