53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மீண்டு வா சுஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக உலகமே பிரார்த்தனை!
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்து உள்ள நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தில், வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை அருகில் இருந்த 26 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் நடந்த நிலையில் கடந்த 7 மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்துவருகிறது.
மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவியின் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. கயிறு மூலம் கையில் சுருக்கு போடப்பட்டு குழந்தையை மீட்கும் பணி தாமதமாகிவருவதால் வேறுவழி மூலம் குழந்தையை மீட்க மீட்பு குழுவினர் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணறு உள்ளே குழந்தை நலமுடனும், தைரியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தையிடம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேச்சு கொடுத்துவருகின்றனர்.
மேலும், கடந்த 7 மணி நேரமாக நடக்கும் இந்த போராட்டத்தில் சுஜித் பத்திரமாக மீட்கப்பட்ட வேண்டும் என உலகமே பிரார்த்தனை செய்துவருகிறது. மீண்டு வா சுஜித் என வலைதளவாசிகள் ட்விட்டரில் #SaveSujith என்ற ஹாஸ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#SaveSujith My son is praying for you..! Don't worry Sujith pic.twitter.com/bwTurLYSAL
— Badrinarayanan (@badri_mando) October 25, 2019
Everyone please pray for sujith 🙏🙏🙏🙏🙏#Savesujith#Savesujithvinsen#Pray_for_sujith#Pray_for_sujith#Pray_for_sujith#Pray_for_sujith#Vijay_Anna_Girl_Fan #Bigil #தளபதி63 #Vijay #ThalapathyVijay #Thalapathy #BigilDiwali #PodraVediya #Bigilreview #BigilBlockbuster pic.twitter.com/9iRyviW7V1
— Jasmine Neera (@jasmineneera) October 25, 2019