மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடபழனி முருகன் கோவில் கும்பாவிஷேகம்.. வானில் வட்டமடித்த கருடர்கள்.! பரவசமடைந்த மக்கள்.!
சென்னை நகரில் உள்ள வடபழனியில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. வடபழனி முருகன் கோவிலுக்கு குடமுழுக்கு நடந்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று கும்பாவிஷேகம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு கோவிலில் அனுமதி வழங்காமல் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2007 ஆம் வருடம் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், மீண்டும் தற்போது 14 வருடங்கள் கழித்து கும்பாவிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கும்பாவிஷேகத்தின் போது சுற்றுவட்டார மக்கள் வீதிகளில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கருடரும் வானில் பறந்தார்.