கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி; கொடுமை! என்ன காரணம் தெரியுமா?



valour-district---aampour---cricket-attack-murder

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்,  நந்தகுமார். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் மது அருந்துவதற்காக மதுக்கடைக்கு சென்று உள்ளனர். அங்கு இருவரும் அளவுக்கு அதிகமான மது அருந்தி உள்ளனர். இந்நிலையில் நண்பன் கார்த்திகை மதுபான கடையிலேயே விட்டுவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார் நந்தகுமார்.

இதனால் மிகவும் கோபமடைந்த கார்த்திக் ஒருவழியாக ரங்காபுரம் வந்து சேர்ந்துள்ளார். அன்று மாலை தனது வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நந்தகுமாரிடம் சென்று என்னை ஏன் கடையிலேயே விட்டு விட்டு வந்தாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

valur

கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் இளைஞர் உயிரிழப்பு!

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கிரிக்கெட் மட்டையால் நந்தகுமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார் கார்த்திக். இதனால் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் நந்தகுமார். மது போதையில் மயங்கி விட்டார் என்று நினைத்த உடன் விளையாடியவர்கள் அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

valur

மறுநாள் காலை வரை கண்விழிக்காததால் நந்தகுமாரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என்று தெரிவித்ததால் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுக்கிடையேயான தகராறில் கிரிக்கெட் மட்டையால் 
தாக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.