பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருமண நாளுக்கு கணவனுக்கு ஆசையாக மோதிரம் போடசென்ற மனைவி! நொடிப்பொழுதில் நிகழ்ந்த அசம்பாவிதம்.
திருமண நாளை கொண்டாட உறவினர்களுடன் கடற்கரைக்கு சென்ற தம்பதியினர் நொடிப்பொழுதில் நிகழ்ந்த அசம்பாவிதால் மனைவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காகித பட்டறையை சேர்ந்தவர்கள் விக்னேஷ் - வினிசைலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வினிசைலா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி இந்த தம்பதியினர் தங்களது இரண்டு ஆண்டு திருமண நாள் நினைவு தினத்தை கொண்டாட குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது கடலில் கால் நனைத்து விட்டு அங்கே உட்கார்ந்து விக்னேஷ் மற்றும் வினிசைலா இருவரும் பேசியுள்ளனர்.
அப்போது சரியாக 12 மணி ஆகவுள்ள தருணத்தில் வினிசைலா ஆசையாக எழுந்து தனது கணவருக்கு மோதிரம் அணிய வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒரு பெரிய அலை வந்துள்ளது. அதில் இருவரும் சிக்கி கொண்டுள்ளனர்.
உடனே உறவினர்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர். அங்கு இருந்த மீனவர்களால் விக்னேஷை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. வினிசைலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிகழ்வு அக்குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.