தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சிடுசிடு நடத்துனர்களுக்கு மத்தியில் இப்படியொரு குணசீலனா?.. வைரல் ட்ரெண்டிங்கில் அரக்கோணம் நடத்துனர்.!
அரசு பேருந்துகளில் நடத்துனராக பணியாற்றுபவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் போது சிடுசிடுவென எரிந்து விழுவது, பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்த ஓட்டுனரை நிர்பந்திப்பது என பார்த்து பழகிப்போன நமக்கு, இப்படியொரு நடத்துனரும் இருக்கத்தான் செய்கிறார் என்ற தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரியை சேர்ந்தவர் கலையரசன். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சோளிங்கர் - அரக்கோணம் வழித்தடத்தில் T6 பேருந்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் இலவச பேருந்து பயண திட்டத்தில் பயன்நிகவரும் மாணவர்களை கண்டாலே பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிக்கொண்டு பயணம் செய்யும் பழக்கத்தை வைத்துள்ளார்.
மேலும்,நடத்துனருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்துகொண்டு வாய்சாவுடால் விடாமல், அவ்விடத்தில் மாணாக்கர்களின் புத்தகப்பைகளை வைக்க இடம்கொடுத்து அணைத்து மாணவர்களையும் அன்போடு அரவணைத்து செல்லும் குணத்தை கொண்டுள்ளார்.
அதேபோல, மாணவர்கள் யாரையும் படியில் நின்று பயணம் செய்ய விடாமல் பார்த்துக்கொள்ளும் கலையரசன், அவர்களுடன் அன்புடன் பழகி வருவதால் வம்பு செய்யும் மாணவர்கள் யாரும் இல்லாமல் அவரின் பயணம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.