திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: 3 வயது சிறுமி டிராக்டர் கலப்பையில் சிக்கி பலி.. தந்தை கண்முன் பரிதாபமாக பலியான உயிர்.. கண்ணீர் சோகம்.!
தந்தையுடன் மகிழ்ச்சியாக உழவுப்பணியை வேடிக்கை பார்த்த சிறுமியின் சிரிப்பு நொடியில் மறைந்துபோன சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்திருக்கும் வேலன்தாங்கல், மதுரா நார்ச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி, இன்று தனது 3 வயது குழந்தை ஐஸ்வர்யாவுடன் விவசாய நிலத்தில் உழவு பணிகளை மேற்கொண்டு இருந்தார்.
இவருக்கு சொந்தமாக டிராக்டர் உள்ள நிலையில், கலப்பை வைத்து உழப்பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது, டிராக்டரில் இருந்த 3 வயது சிறுமி எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.
இதில், சிறுமி கலப்பையில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மகளை மீட்ட தந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.