மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உளுந்தூர்பேட்டை: தொலைந்துபோன பயணியின் ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டு ஒப்படைத்த தனியார் பேருந்து நடத்துனர்.. குவியும் பாராட்டுக்கள்.!
பணத்திற்கு ஆசைப்படாமல் உரியவரிடம் ரூ.10 ஆயிரம் தொகையை கொண்டு சேர்த்த நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை இவர் விழுப்புரம் நோக்கி உளுந்தூர்பேட்டையில் இருந்து நடத்துனராக பணியை கவனித்தவாறு பயணம் செய்துள்ளார். அப்போது, பெண் பயணி ஒருவர் ரூ.10 ஆயிரம் பணத்தை தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். அதனை பயணி தவறவிட்டதாக தெரியவருகிறது.
சாதாரண பை என நினைத்த நடத்துனருக்கு அதில் ரூ.10 ஆயிரம் பணம் இருக்கவே, அதனை எடுத்து பத்திரமாக வைத்துக்கொண்டுள்ளார். பின்னர், பயணி தனது பணம் காணாமல் போனது குறித்து பரபரப்பாக விசாரித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, பேருந்து நிலைய காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் முன்பு பயணியின் ரூ.10 ஆயிரம் பணம் ஒப்படைக்கப்பட்டது. காவலர்களும், சம்பந்தப்பட்ட பெண்ணும், சக ஓட்டுநர்-நடத்துனர்களும் சிவசங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
நன்றி: அஜித் சிவா, நம்ம உளுந்தூர்பேட்டை.