மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் காதலை ஏற்க மறுத்ததால் இரயில் முன்பாய்ந்து கல்லூரி மாணவர் விபரீத முடிவு: விருதுநகரில் நடந்த சோகம்.!
விருதுநகரில் இருக்கும் முத்துசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜா ராம். இவரின் மகன் அருண் காந்தி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அருண் காந்தி பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது. அந்த பெண்மணி அருணின் காதலுக்கு மறுப்புச்சொல்லி வந்துள்ளார்.
இதனால் மனவேதனையில் சுற்றிவந்த அருண், தனது நண்பர்களிடம் பெண் காதலை ஏற்க மறுத்தது குறித்து கூறி வேதனைப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி இரயில் நிலையத்திற்கு உட்பட்ட தந்திரமரத்தெரு இரயில்வே கேட் பகுதிக்கு வந்த அருண் காந்தி, இரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த விருதுநகர் இரயில்வே காவல் துறையினர், அருண் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.